முந்திரியின் முத்தான நன்மைகள் !!

👉 முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம் உள்ளது. 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன.

👉 செறிவு ட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம் இருக்கின்றது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

👉 முந்திரியில் சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

👉 முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

👉 இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

👉 முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

👉 முந்திரிப் பருப்புக்களை ஒரு கையளவு உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு பசியைக் கட்டுக்குள் வைக்கும்.

👉 முந்திரியில் உள்ள தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உணவில் உட்கொள்வது நல்லது.

👉 முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர;ச்சி, செரிமானம் மற்றும் நியு க்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.

👉 டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. எனவே முந்திரியை அளவுடன் சாப்பிடவேண்டும்.

👉 முந்திரியில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. மேலும் இரத்தநாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.

எனவே இதனை அளவோடு உணவில் சேர;த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் !!