இயற்கைக்கு மாறுவோம் !!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

🍅 இன்று பலரும் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கி இருப்பது மகிழ்ச்சியான ஒன்று தான். ஆனால் பலரும் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதில் தவறு செய்கின்றனர்.

🍆 இது பற்றிய எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

🍇 நான் ஒரு சு ப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தேன்.

🍈 அங்கு காய்கறிகள் பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்ற பலகையின் கீழ் வெண்டை, கத்தரி மற்றும் சில கீரை வகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

🍉 அப்பொழுது ஒரு பெண்மணி இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பார்த்து விட்டு ஆர்வமாக அருகில் வந்தார்.

🍊 ஆனால் காய்கறிகளை பார்த்தவுடன் முகம் சுளித்தார். ஏனெனில் காய்கறிகள் பளபளப்பாக இல்லை. மேலும் ஒரு சில இடங்களில் பு ச்சி தாக்குதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டன.

🍋 உடனே அந்த பெண்மணி, அங்கு இருந்த பணியாளர் ஒருவரை அழைத்து இப்படி காய்கறிகள் இருந்தால் எப்படி வாங்குவது? நல்ல காய்கறிகளை வையுங்கள், என்று கூறினார்.

🍍 அதற்கு அந்த பணியாளர் இது, இயற்கை முறையில் விளைந்தது என்று கூறினார். ஆனால் அந்த பெண்மணி சமாதானம் அடையவில்லை.

🍎 காய்கறிகளை வாங்காமல், இது போன்ற காய்கறிகளை நீங்கள் விற்பனை செய்தால் கடைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று போகிற போக்கில் போட்டு விட்டு சென்று விட்டார்.

🍐 காய்கறிகள் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள அருகில் சென்று காய்கறிகளை பார்த்தேன்.

🍑 அந்த பெண்ணின் ஏமாற்றம் எனக்கு தெரிந்தது, அதே சமயம் அவர்களின் அறியாமையும் கூட....

🍒 நாம் எல்லாம் பளபளப்பாக, பு ச்சி தாக்குதல் இல்லாத காய்கறிகளை வாங்கி பழகியவர்கள். அவர் இயற்கையாக விளைந்த பொருட்களை பார்த்தவுடன் அதுவும் பளபளப்பாக தான் இருக்கும் என்று நம்பி ஏமாந்து விட்டார்.

🍅 ஆனால் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளில் தான் பு ச்சிகளின் தாக்குதல் இருக்கும் என்று அவர் அறியவில்லை.

🍇 ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பு ச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம்.

🍈 அதை சுத்தம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பு ச்சிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

இது எப்படி சாத்தியமாகும்?

🍊 வண்டுகளே உண்ணாத, புழுக்களே தாக்காத உணவு பொருட்களை நாம் சாப்பிட்டால் நாம் மனிதர்களா?

🍋 மேலும் விவசாயிகள் பு ச்சிமருந்துகளை பயன்படுத்துகிறார்கள், என்று அவர்களை குறை கூறும் நாம், இயற்கை முறையில் சற்றே புழு தாக்குதல் உடைய காய்கறிகளை வாங்க மறுப்பதை என்னவென்று கூறுவது?

🍍 அவர்கள் இயற்கை முறைக்கு மாறினாலும், அவர்களை மீண்டும் பு ச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தூண்டுவது நாம் தான்.....!!

🍎 மீண்டும் நான் உள்ளே சென்று பொருட்களை வாங்கி வருவதற்குள் அந்த பணியாளர் அங்கிருந்த இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்ற அட்டையை எடுத்து விட்டார்.

🍐 அது மட்டுமில்லாமல் அங்கு இருந்த காய்கறிகளின் இடம் காணாமல் போய்விட்டது. இனிமேல் அந்த கடையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்கு இடம் இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.

🍒 அந்த இடத்தில் ஒரு விவசாயின் உழைப்பு வீணானது. நம்மால் ஒருவரின் உழைப்பு வீணாகலாமா?