ஆரோக்கியமாய் வாழ்வதை பற்றி யோசிப்போம் | Aware to live Healthy Life | Org...




நாளுக்கு நாள் மனிதனின் பேராசை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றதுஇதில் உணவு பொருட்கள் கெட்டுப் போகக் கூடாது என்று நினைப்பது, பேராசை என்று கூட இல்லாமல் முட்டாள்தனத்தின் உச்சக் கட்டம் என்று கூட சொல்லலாம். பத்து நாட்கள் ஆனாலும் தண்ணீரில் புழு வைக்க கூடாது. ப்ரிட்ஜில் வைக்கவில்லையென்றாலும் பழங்கள் அழுகிப் போகக் கூடாது. காய்கறிகள் வாடிப் போகக் கூடாது. தானியங்களில் வண்டோ பூச்சியோ வரக் கூடாதுஇது எப்படி இருக்கின்றது என்று சொன்னால், மனிதனுக்கு மரணமே வரக் கூடாது என்று கூறுவது போல் உள்ளது.
        இயற்கையாக விளைந்த ஓரிரு நாளில் கெடக் கூடிய ஓரிரு காய்கறிகள், பழங்கள், தானியங்கள்தான் இறைவன் நமக்காக படைக்கப்பட்டதுஇதை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைப்பது, மனிதனுக்கு மனிதன் செய்யும் துரோகம்.
        சூப்பர் மார்க்கெட்டுகளில் கவர்ச்சியாக விற்கப்படும் பழங்களும், முற்றிப் போகாமல் இளமையாக ஜொலிக்கும் காய்கறிகளும்தரமான தானியவகைகள் என்று பகட்டான பாலீத்தீன் கவர்களில் வைத்து விற்கப்படும் இவை அனைத்திலும் விஷத்தன்மை உள்ளது என்பதை நாம் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கின்றோமா?
        பாட்டியின் பக்குவம், அம்மாவின் கை வண்ணம் அதே மணம், அதே சுவை என்று பிரபலங்களால் விளம்பரம் செய்யப்படும் மசாலா பொருட்களில் சில மிருகங்களின் சாண எரு கலப்படம் செய்வது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
        நாம் ஆடம்பர பொருட்களின் மேல் கொண்ட மோகத்தின் விளைவு, மிருகத்தின் கழிவுகளை உண்ணக் கூடிய நிலைக்கு, நமக்கு தெரியாமலே நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
        பூச்சி மருந்து கலக்கப்பட்ட உணவுகள்கிட்ட பூச்சியோ, புழுவோ, வண்டோ வராதுஈக்கள் மொய்க்கும் உணவு வகைகள்தான்  நச்சுத்தன்மை இல்லாத உணவுகள். விஷத்தன்மை உள்ள உணவுகளை சாப்பிட்டால், தன் ஆரோக்கியத்திற்கு கேடு என்று ஒரறிவு ஜீவனுக்கு தெரிந்தது கூட, ஆறறிவு இருக்கும் நமக்கு தெரிஞ்சும், தெரியாமல் இருக்கோம்.
        ‘கூழுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை. வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லைஎன்னும் நம் முன்னோர்களின் பொன் மொழிகளில் நூறு சதவீதம் உண்மை இருக்கின்றதோ இல்லையோ, சுத்தம் இருக்கும்னு சொல்லலாம்.
        இந்த கட்டுரையில் நாம் அறிந்து கொண்ட விஷயங்களில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பது தங்களுக்கே தெரியும்.
           

        தாங்கள் அறிந்து கொண்ட இவ்வளவு விஷயங்களும்ஆர்கானிக் லிவ்விங்சேனல் மூலமா யூ டியூப் மூலம் வெளியிட்டுள்ளோம். அதனால், அந்த வீடியோக்களை நீங்கள் லைக் பண்ணுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்.   உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள். மறக்காமல் எங்க ஆர்கானிக் லிவ்விங் என்னும் யூடியூப் சேனலுக்கு சப்கிரைஸ் பண்ணுங்கள்.
ஆரோக்கியமாய் வாழ்வதை பற்றி யோசிப்போம் | Aware to live Healthy Life | Organic Living https://youtu.be/R4S1h3yNDBg