மரம் வளர்ப்பதால் என்ன நன்மைகள் | Why Trees are so Important | Benefits o...



ஒரு கனவு வந்தது... அதில் 2030 ல் நாம் இருகிறோம்.... மிகவும் வேதனையான நிலையில் நம் அடுத்த தலைமுறை மக்கள்... தண்ணீருக்கு பதிலாக மாத்திரை உட்கொள்கின்றனர்... கடும் வரட்சி... வெப்பத்தால் பல உயிரினங்கள் காணவில்லை.. எங்கு பார்த்தாலும் கண்ணீர் அஞ்சலி போஷ்டர்கள்... விவசாயம் என்ற வார்த்தை வரலாறு புத்தகத்திலும் இல்லை..காலத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்ட மனிதர்கள்.... ஒரு குவளை தண்ணீரின் விலை 38330.15 காசு.... சட்டென்று முளிப்பு வந்தது... உடனே எழுந்து என் கை குழந்தையை பார்த்தேன் அது சிரித்துக்கொண்டே என் கண்களை கண்ணீராக்கியது... நாம் நமது குழந்தைக்காக சில விசயங்களை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன்... கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிப்பது சொத்து சேர்ப்பது மட்டும் நாம் அடுத்த தலைமுறையினருக்கு செய்யும் கடமை அல்ல நாம் வாழும் இந்த பூமியை மிகவும் சுத்தமானதாக அவர்களுக்கு தரவேண்டும்.... அதற்கு ஒன்றே ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்... அறம் மனிக்கவும் மரம் வளர்க்க வேண்டும்... ஒரு மரம் ஒரு பெருங்கடலுக்கு சமம்.... நாம் சுவாசிக்கும் காற்று மாசுப்படுவது தவிர்க்கப்படும்.. மேகங்களில் இருக்கும் நச்சுத்தன்மை சுத்தமாக்கப்படும்... நிலத்தடி நீர் வலம் அதிகரிக்கப்படும் , மிக முக்கியமாக மழையை உருவாக்கும்... அது எப்படி.... இந்த மரம் நிலத்தடி நீரை வேர் மூலம் உரிஞ்சு இலைகள் மூலம் காற்றோடு கலக்கும்... ப்ளாஷ்டிச் குப்பைகள், வாகன புகை, தொழிற்ச்சாலையிலிருந்து வரும் புகை, குளிர்சாதன பெட்டியில்லிருந்து வரும் கெமிக்கல், இவைகளிலிருந்து வரும் மீதேன், கார்பன் டை ஆக்‌ஷைடு , போன்ற கொடிய வாயுதான் மேகங்கலை மாசு படுத்தி மழை வராமல் தடுக்கும்... சூரிய வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் ஓசோன் லேயர் ஓட்டையானதுக்கும் இதுதான் காரணம் .... இந்த வாயுவால்தான் உலகம் வெப்பமையமாதல், புதிய புதிய நோய்கள், வருகின்றது...ஒரு மரம் இந்த அனைத்து பிரச்சனைளை சரி செய்ய வல்லது... மரம் என்ன செய்யும் தெரியுமா.. அந்த ஆபத்தை தரும் அத்தனை வாயுவையும் தனக்குள்ளே இழுத்துக்கொண்டு ஆரோக்கியம் தரும் ஆசிஜனை காற்றுக்கும் மேகங்களுக்கு அனுப்பி சுத்தம் செய்யும் மழையும் கண்டிப்பாக வரவழைக்கும்... முதலில் நம் வீட்டில் மரம் வளர்க்க ஆரம்பிப்போம், அடுத்தது நம் தெருவில், அடுத்தது நம் ஒவ்வொருவரின் ஊர்களிலும்... மரம் காசு வாங்காமல் நுரையீரலை சுத்தம் செய்யும்.
மரம் பழங்களை கொடுத்துவிட்டு பணம் கேட்காது, மரம் வஞ்சகமில்லாமல் வாழ்க்கையை அஞ்சுவருசம் அதிகப்படுத்தும், மரம் தின்னத்திகட்டாத தேனை கொடுக்கும் தேவதைகளை வரவழைக்கும், மரம் வசந்தகாலத்தில் பூவாசத்துடன் தென்றலையும்

வாரிவழங்கும். வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் நம் தலைமுறையை - நிருபன் சக்ரவர்த்தி

மரம் வளர்ப்பதால் என்ன நன்மைகள் | Why Trees are so Important | Benefits of Tree | Organic Living https://youtu.be/DDk_aH1lXZ0