செளசெளவை நாம் காய் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது ஒரு வகை பழம். இதை சமைத்தும் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். கோமோசெஸ்டின் என்னும் ஒரு அமில ஆக்ஸ்டிக் இருக்கின்றது. இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோயோ, பக்கவாதமோ ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதை தடுப்பதற்கு வைட்டமின் பி ரொம்ப தேவைப்படுகின்றது. இந்த செளசெளவில் போலேட் என்னும் வைட்டமின் பி இருக்கின்றதால் இதயத்திற்கு இது ரொம்ப நல்லது. வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆன்டியாக்ஸ்டின் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வைட்டமின் சி நம் உடலில் ஏற்படுகின்ற திசு சிதைவுகளை சரி செய்ய வல்லது. இந்த ஆன்ட்யாக்ஸ்டின் வந்து மெதுவாகவோ அல்லது சாத்தியமான வகையில் புற்று நோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் சி யை, செளசெள 17 சதவீதம் நம் உடலுக்கு வழங்குகின்றது. அதனால் இது புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. செளசெளவை காலையில் பொடிமாசா செய்து உண்டால், அந்த நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன், சக்தியுடன் இருக்கலாம். அது மட்டுமல்லாமல் இதில் மேக்னலிஸ் என்னும் ஒரு மினரல் இருக்கின்றதால், அந்த நாள் நாம் புரதத்தையோ, கொழுப்பையோ உண்டோம் என்று சொன்னால், அதை எனர்ஜியாக மாற்றும் சக்தி இதற்கு உண்டு. மலச்சிக்கல் என்னும் பெரிய பிரச்சனையை தடுத்து நிறுத்துகின்றது.
இதை நாம் தினமும் உட்கொண்டு வந்தால் குடல் பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க இது உதவுகின்றது. இதில் காப்பர் என்னும் மினரல் இருப்பதனால், தைராய்டு வளர் சிதையை கட்டுப்படுத்த அயோடினுக்கு உதவி செய்கின்றது. இந்த செளசெளவில் சிங்க் அதிகம் இருப்பதால் ஆண்மையை அதிகரிக்க செய்து முகப்பருவை தடுக்க உதவுகின்றது. தோல் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த ஹார்மோன்களை ஊக்குவிக்கின்றது. மலட்டுத் தன்மையை போக்குகின்றது. நம் வீட்டில் இருக்கும் வயதான பெரியோர்களுக்கு செளசெள சாப்பிட்ட சொன்னால், அதில் உள்ள வைட்டமின் கே எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகின்றது.
நாம் செளசெளவை தினமும் உட்கொண்டால், நம் உடலுக்கு பொட்டாசியத் தேவையை அது பூர்த்தி செய்கின்றது. இது தாது, இரத்த அழுத்த அளவுகளைக் குறைக்க உதவுகின்றது. இதில் வைட்டமின் பி6 என்னும் வைட்டமின் இருக்கின்றதால், இது மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது.
இதனால் தினமும் செளசெளவை உண்போம் செளக்கியமாய் வாழ்வோம்.
Chow Chow Health Benefits | Chayote Health Benefits | சௌ சௌ மருத்துவ பயன்கள் | Organic Living https://youtu.be/8UjW-rqiwZQ