நாம் இப்போது ஸ்பைரோலினா அதாவது சுருள் பாசி என்று அழைப்பர். இந்த சுருள் பாசியின் அற்புதங்கள் பற்றியும் மருத்துவக் குணங்கள் பற்றியும் காணப் போகின்றோம். இந்த சுருள் பாசியில் மற்ற உணவுகளில் உள்ளதை விட 60 முதல் 70 சதவிகிதம் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. இந்த புரத சத்தானது 90 சதவீதம் ஜீரண சக்தியை தருகின்றது. ஜீரண சக்தி எந்த அளவுக்கு அதிகமா இருக்குதோ அந்த அளவுக்கு மனிதன் நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
பீட்டாகரோட்டின் அனைத்து விதமான புற்று நோய் தாக்குதல்களிலிருந்தும், அபாயத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது. காமாலினோ லெனிக் என்னும் ஒரு வித அமிலம் சுருள் பாசியில் உள்ளது. இந்த அமிலம் கொழுப்பு தேக்கம், உடல் பருமன், மூட்டு வலி போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.
இந்த அமிலத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா? இந்த அமிலம் சுருள் பாசி மற்றும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. அந்த அமிலம் அடங்கிய சுருள் பாசியில் வைட்டமின்கள், வைட்டமின்கள் பி காம்ளக்ஸ், இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம், மக்னீசியம், செலினியம் ஆகிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் இரும்புச் சத்தானது எளிதில் ஜீரணக்கப்பட்டுவிடும்.
அலர்ஜியோ, பக்க விளைவுகளோ ஏற்படாது. மாதவிடாய் பிரச்சனையில் உள்ள பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. ஏனென்றால், வைட்டமின் 2 உள்ள ஒரே அசைவ சுருள் பாசி இதுதான். இந்த பாசியை நீலக் கடல் பாசி எனவும் அழைப்பார்கள். இதில் உள்ள பாலிசக்கரைடுகள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவைக் கட்டுபடுத்துகின்றது. விஷத்தன்மையில் இருந்து பாதுகாக்கக் கூடிய குளோரோபில் இதில் அதிக அளவு இருக்கின்றது. சுருள் பாசியில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மோடி என்னும் என்சைம் உடலில் ஆக்ஸிசனின் ஏற்றத்தை தடுத்து, உடலின் இளமையை தக்க வைக்கின்றது. பாலி அமைப்பியல் செல் சவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது. 80 சதவிதம் ஆர்களினம், 20 சதவிதம் அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவை இந்த சுருள் பாசி. காய்கறிகள், பழங்கள், கோதுமை, இறைச்சி, கடல் உணவுகள் என எல்லாவகை உணவுகளின் சக்தியையும் கொண்டது இந்த சுருள் பாசி என உணருவோம். இறைவனாய் இருக்கும் இயற்கை உணவுகளை இனிது என போற்றுவோம்.
வணக்கம் நண்பர்களே பொதுவாக நம் அனைவரிடமும் ஒரு பழக்கம் இருக்கின்றது அது என்னவென்றால் சில காய்களை பச்சையாக உண்பது. இது உடலுக்கு நன்மை தரும். இருந்தாலும், அதில் சில காய்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. அதை நாம் பச்சையாக உண்பதை விட, சமைத்து உண்டால் நம் உடலுக்கு இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும். உதாரணத்திற்கு முட்டைக்கோசு, முட்டை, தக்காளி, வெண்டைக்காய் மற்றும் ஒரு சில கீரை வகைகள். இதில் முக்கியமாக முட்டைக்கோஸை வேக வைத்து உண்ணும் போது 7 முதல் 26 சதவீதம் இரும்புச்சத்து நம் உடலில் சேரும். இந்த முட்டைக்கோஸை நம் உணவில் சேர்த்துக் கொள்வோம். வலுவான உடல் நலம் பெறுவோம். நம் ஆரோக்கியம், நம் வாழ்க்கை!