Dont Eat in these food Empty Stomach | வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீர்...








        வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சோடா.:
   இந்த சோடா என்பது பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இந்த சோடாவில் கார்போநைட்ரேட் ஆக்ஸிட் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள ஆக்ஸிட்டுடன் கலந்து ஒவ்வாமை குமட்டல் போன்றவற்றை உண்டு பண்ணும்.

தக்காளி
      தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதில் உள்ள ஆஸிட்தான் காரணம். இரைப்பையில் சுரக்கும் ஆக்ஸிடும், தக்காளியில் உள்ள ஆக்ஸிடும் கரைய முடியாத ஒருவித ஜெல்லி உருவாகி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரை:
        மருத்துவர் சொல்லாமல் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு செய்வதால், அந்த மாத்திரைகள் வயிற்றில் உள்ள படலத்தை அரித்து விடக் கூடும். அது மட்டுமன்றி வயிற்றில் உள்ள அமிலத்தோடு கலந்து உடலில் ஏற்ற தாழ்வை உண்டு பண்ணும்.

ஆல்ஹகால்:
             ஆல்ஹகாலை எப்படி குடித்தாலும் தவறுதான். அதிலும் வெறும் வயிற்றில் குடித்தால் சொல்லவா வேண்டும்? அதில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப் படலத்தை மட்டும் அல்லாமல், எல்லா உடல் உறுப்புக்களையும் அரித்து வயிற்று எரிச்சலை உண்டாக்கி உயிர் போகும் அபாயத்தில் கொண்டு போய் விட்டு விடும். காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.  அப்படி சாப்பிடும்போது அதுவும் வயிற்றில்  சுரக்கும் அமிலத்தோடு கலந்து எரிச்சலையும், பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.

காபி:
        இந்தக் காப்பியை நூற்றுக்கு தொன்னூறு பேரு வெறும் வயிற்றில்தான் குடிப்பார்கள். ஆனா, அது ரொம்பவே தவறு.  அதில் இருக்கும் காபின் மோசமான பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு, பின்பு காப்பியை குடிப்பது நல்லது.
           

டீ:
        காப்பியை போலவே, டீ யிலும் காபின் உள்ளது. அதுமட்டுமல்லாமல், டீ யில் அமிலத்தன்மையும் அதிகமா இருக்கின்றது. இதனால், இதுவும் வயிற்றுப் படலத்தை அரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால் இதையும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.


தயிர்:
        தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதில் நல்ல பாக்ட்ரீயாக்கள்தான் உள்ளன. இருந்தாலும், இந்த பாக்ட்ரீயா வயிற்றுப் படலத்தில் சேர்ந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி விடும்.



வாழைப்பழம்:
            வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகமா இருப்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடலில் உள்ள மக்னீசியம் அதிகரித்து, அதனுடன் கால்சியம் சேரும் போது உடலில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடும்.


சக்கரைவள்ளிக் கிழங்கு:
                  இந்த கிழங்கில் உள்ள டானிக் மற்றும் பெட்டின் குடல்வாலை தூண்டிவிட்டு அதிகப்படியான செரிமாண அமிலத்தை சுரக்கச் செய்து நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்திவிடும்அதனால், ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் சாப்பிடும் விதத்தில் சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்குமே தவிர குறையாது.


எனவே உணவு விஷயத்தில் இங்கு கூறப்பட்டுள்ளதை கடைபிடிப்போம் உற்சாகமான வாழ்வு அமைப்போம்.


Dont Eat in these food Empty Stomach | வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீர்கள் | Organic Living https://youtu.be/05wznsQfvdc