பொதுவாக நாம் மென்மையா இருப்பவர்களையும், பயந்த சுபாவம் உடையவர்களையும் பார்த்தால் தொட்டாச்சினுங்கி என்று கிண்டல் பண்ணுவோம். ஆனால், உண்மை என்னவென்றால் தொட்டாச்சினுங்கி அபரமான சக்தி கொண்டது. முழுக்க முழுக்க மருத்துவ குணம் கொண்டது. இதன் பெயர் தொட்டாச்சினுங்கி அல்ல, தொட்டாச்சுருங்கி.
தொட்டாச்சுருங்கி என்னும் இந்த செடியை 1300 ஆண்டுகளுக்கு முன்னரே கிரெக்க மருத்துவத்தில் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இப்போது இந்த தொட்டாச்சுருங்கி செடியை ஆயுர்வேதத்திற்கும், யுனானி மருத்துவத்திற்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இதனுடைய மருத்துவ பயன் என்னவென்று பார்த்தால், குழந்தை பேறின்மை பிரச்சனை, தோல் வியாதி பிரச்சனை, மாத விலக்கு பிரச்சனை, சிறுநீர்ப் பிரச்சனை, கல்லடைப்பு, வயிற்றுப் புண், மூலநோய், மூட்டுவீக்கம், இடுப்பு வலி என பல பிரச்சனைகளுக்கு இந்த தொட்டாச்சுருங்கி செடி தீர்வா இருக்கின்றது.
இந்த தொட்டாச்சுருங்கி செடி, துளசிச் செடி மாதிரி தெய்வீக தன்மை கொண்டது. இதில் காந்த சக்தி இருக்கின்றது. தொட்டாச்சுருங்கி செடியை தொடும்போது அது சுருங்குவதற்கு காரணம் அதை தொட்ட மனிதனுக்குள்ள, அதன் சக்தியெல்லாம் போய்விடும். அதனால இந்த தொட்டாச்சுருங்கி செடியை வீட்டில் வளர்த்து 48 நாள்கள் தொடர்ந்து தொட்டுக் கொண்டு வந்தால் அதிக சக்தி மனிதனுக்கு கிடைக்குமென்று சித்தர்கள் கூறியுள்ளனர். நமஸ்காரி, காமவர்த்தினி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில் இதை ‘டச் மீ நாட்’ என்று செல்லமாக கூறுவார்கள்.
தொட்டாசுறுங்கில இவ்வளவு மருத்துவம் இருக்கா | Touch me Not or