‘மாதா ஊட்டாத சத்தை மாங்கனி ஊட்டும்’… என்னும் பழமொழி ஒன்று உள்ளது. கனிகளுக்கு எல்லாம் அரசன் என்று கருதப்படுகின்ற மாம்பழம்தான் கனிகளில் முதல் கனி என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, புரதம், பலசக்கரை இவையெல்லாம் உள்ளது.
இந்த மாம்பழம் இரத்த இழப்பை கட்டுப்படுத்துகிறது. இரவில் தூங்கப் போகும் முன்பு ஒரு மாம்பழம், ஒரு டம்ளர் பாலும் உட்கொண்டால், நம் உடல் நலத்தில் நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும்.
மாம்பழத்தை தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் தோலில்தான் வைட்டமின் சி உள்ளது. அதுவுமில்லாமல், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரம் இவை எல்லாமே இதில் அதிகமாக இருக்கின்றது.
மாம்பழத்தை பற்றி நாம் அறிந்து கொண்ட செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயன் தரும் செய்திகளாகும். மாம்பழத்தை சாப்பிடுவோம் மகத்தான வாழ்வு பெறுவோம்.
Mango and its Uses | மாம்பழம் | Organic Living https://youtu.be/IQJQLhg34UU