நாம் நமது உடலை சுத்தப்படுத்தவே குளிக்கின்றோம். அதற்கு தண்ணீரைப் பயன்படுத்துகின்றோம். அதே போலத்தான், நமது உடலுக்குள்ளேயும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும். நாம் நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் வயிறு சுத்தமாகின்றது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது வயிறு சுத்திகரிக்கப்படுகின்றது.
சிறுநீர் மூலமாகவும், காலைக் கடன் மூலமாகவும் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விடும். இது தொடர்ந்து நடைபெறும் போது. நம் உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்படி என்ன ஆரோக்கியம் கிடைக்கும் என்று கேட்கின்றீர்களா.
85 சதவீதம் இரத்தத்தை உருவாக்குகின்றது. 75 சதவீதம் சதையை உருவாக்குகின்றது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை, நம் உடம்பில் சேர்ப்பதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. அதற்கு நம் உடம்பை தயார் பண்ணுகின்றது.
அதுமட்டுமல்லாமல், அந்த உணவுகளை சத்தாக மாற்றுகின்றது. 22 சதவீதம் எலும்புகளை பாதுகாக்கின்றது. எலும்புகளில் உள்ள ஜாயிண்ட்டுகளுக்கும், அதன் சவ்வுகளுக்கும் இளகும் தன்மையைக் கொடுக்கின்றது. சுவாசிக்க ஆக்சிஜனை உண்டாக்குகின்றது. ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து, நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் வேஸ்ட் வெளியேறுகின்றது. உடல் எடை குறைகின்றது.
முகத்தில் இருக்கின்ற கரும்புள்ளிகள் மறைகின்றது. ஜீரணசக்திகள் அதிகமாகின்றது. தலையில் இருக்கும் பொடுகு நீங்குகின்றது. இப்படி பல நன்மைகள் தரும் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ரொம்பவே நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்படி வெறும் வயிற்றில் தன்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக பழகி விடும்.
அதற்கு பின்பு நீங்களே நெனைச்சாலும் உங்களால இந்த பழக்கத்தை விட முடியாது. அப்புறம் உங்கள் நண்பர்கள் அனைவரும், உங்கள் ஆரோக்கியத்தின் இரகசியத்தைப் பற்றியும், உங்கள் அழகின் இரகசியத்தைப் பற்றியும் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. நல்ல விஷயம், இதை உங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறையில் கொண்டு வாங்க, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க……….
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinking water Heals our human body | Organic Living https://youtu.be/3yWqcMJxD6s