நாம் பெரும்பாலும் ஒரு சில பழங்களை உட்கொள்ளும் போது, அதன் தோலை நீக்கிவிட்டுத்தான் உண்போம். சில பழங்களை தோலை உரிக்காமல் சாப்பிடுவோம். அதன் ருசியும் நன்றாகவே இருக்கும்.
ஆனால், நாம் முக்கியமாக வாழைப்பழத் தோலை உரித்துவிட்டுத்தான் சாப்பிடுவோம். அப்படி உரிச்சு கீழே தூக்கிப் போடும் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்குது என்பதை இப்போது பார்க்கலாம்.
வாழைப்பழத்தை தோலை பற்களில் தேய்த்தால் பற்களை வெண்மையாக்கும். முகத்தில் பருவுகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத் தோலை இரவு முழுவதும் வைத்தால் பருக்கள் விழுந்து விடும். வாழைப்பழத் தோலை முகத்தில் மசாஜ் செய்ய முகப்பருவு எளிதில் குணமாகும். முட்டை கருவுடன் சேர்த்து முகத்தில் பூசி வர கருவளையம் நீங்கும். உடலில் எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால், முப்பது நிமிடங்களில் வலி நீங்கி விடும்.
சொரியாஸிஸ் இருக்கும் நண்பர்கள் வாழைப்பழத் தோலை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் குணம் பெறலாம். கொசு கடித்த இடத்தில் இந்த வாழைப்பழத் தோலை சேர்த்தால் அதுவும் குணமாகும்.
நாம் உபயோகிக்கும் ஷீ, லெதர், சில்வர் பொருட்களில் இந்த வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால் அந்த பொருட்கள் பளப் பளப்பாகும். மிக முக்கியமாக யூவி கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும். கொஞ்ச நேரம் வாழைப்பழத்தோலை சூரிய வெப்பத்தில் வைத்த பின்பு கண்களில் வைக்க கண்புரை வராமல் தடுக்கும்.
இந்த அற்புத குணங்கள் நிறைந்த வாழைப்பழத்தோலை பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்.
Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Livinghttps://youtu.be/f-lXQ876598