முக்கனிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது வாழைப்பழம். ‘மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிசு’ என்று சொல்வார்கள். விலையும் மிகவும் குறைவு. அனைவரும் வாங்கக்கூடிய எளிதான ஒரு பழம். எல்லா சத்துக்களும் நிறைந்த பழம் என்று, வாழைப்பழத்தோட பயன்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
மூலநோயையும், மலச்சிக்கலையும் எளிதாக குணப்படுத்தக் கூடிய ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம்தான். எல்லாவிதமான வைட்டமின்களும், தாது பொருட்களும் இதில் அடங்கி இருக்கின்றது.
கண் பார்வை சரி செய்வதில் இது சரியான பழம். வளர்ச்சிக்கு உதவுகின்றது. உடல் பருமனை அதிகப்படுத்துகின்றது என்பதால், எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட மாட்டார்கள்.
Banana Benefits | Valaippalam | வாழைப்பழம்| Organic Living https://youtu.be/pPQuI5VhtqA