15 மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் | 15 Herbs should be i...




நாம் அடுத்து வீட்டில் வளர்க்க வேண்டிய பதினைந்து மூலிகைச் செடிகள் பற்றி பார்ப்போம்துளசியுடன் மிளகு, வெற்றிலை வேப்பம் பட்டை சேர்த்து கசாயம் வைத்து குடித்தால் காய்சல் குணமாகும்தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்சோற்றுக்கற்றாழையுடன் வெள்ளை பூண்டு கருப்பட்டி சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பபை நோய்கள் நீங்கும். மஞ்சள் கரிசாலங்கண்ணி இதை கீரையாக வைத்து சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும். அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் இரத்த ஓட்டம் சீராகும். ஆடாதொடையில் இருந்துதான் எல்லா இருமல் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றது. கர்ப்பிணி பெண்கள் இதன் வேரை கசாயம் வைத்து எட்டாவது மாதத்திற்கு மேல் குடித்து வந்தால் சுகப்பிரசவம் நடக்கும்.

   பூலாங்கிழங்கு இது கிச்சளி கிழங்கு என்னும் பெயரிலும் கிடைக்கும். இதை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துக் குளித்தால் வியர்வை நாற்றம், உடல் துர்நாற்றம் இருக்காது. ஓமவள்ளி இதற்கு கற்பூரவள்ளி என்னும் பெயரும் இருக்கின்றது. இதன் தண்டுஇலை சாறை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.
      
      நேத்திர பூண்டு, இதன் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் ஊறப் போட்டு ஜந்து நாள் வெயிலில் காயவைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்புரை தடுக்கப்படும். நிலவேம்புகசாயத்தை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் விஷக் காய்ச்சல் வராது. பூனைமீசைமிசர் நாராயணி இதையும் வெள்ளைப் பூண்டு, மிளகு சேர்த்து லேகியமாய் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பிரச்சனை தீரும்நொச்சி, நீள நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என நொச்சியில் பலவகைகள் இருக்கின்றது. இந்த இலையை மஞ்சளுடன் சேர்த்து வெந்நீரில் ஆவி பிடித்தால் எல்லாவிதமான தலைவலியும் போய்விடும். தடுதாழை, இதையும் ஆவி பிடித்தால் உடல் வலி குறையும். மூட்டு வலி, வீக்கம் உள்ள இடங்களில் இந்த இலையை வைத்து கட்டினால் வலி குறையும். கொத்தமல்லியை சாறாகவும், கசாயமாகவும் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கல்லீரலை சுத்தப் படுத்தி பலப்படுத்தும்.
       

        முடிந்த அளவுக்கு இந்த மூலிகைகளை உங்கள் வீட்டில் வளர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளதை பார்த்தீர்கள் அல்லவா.

15 மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் | 15 Herbs should be in your house |Organic Living https://youtu.be/Q5xQ-0t4Gd0