இந்த உலகில் எத்தனை செடிகள் இருந்தாலும், அவை அத்தனையும் ஒற்றை துளசி செடிக்கு ஈடாகாது. துளசி செடியை நாம் கடவுளுக்கு சமமாக பார்ப்போம். ஒருவர் துளசி மாலையை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜித்தால் ஆயிரம் அஸ்வத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றது.
பொதுவாக இயற்கையோட படைப்புகளில் ஒன்றை கடவுளோட ஒப்பிடுகின்றோம் என்றால், அதில் கண்டிப்பாக மருத்துவ குணங்கள் இருக்கும். மனிதனின் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும் என்பதுதான் காரணம். வேப்பிலையை அம்மனுடனும், அருகம்புல்லை விநாயகரோடும் ஒப்பிட்டு சொல்லப்பட்டு இருக்கின்றன.
துளசி செடியில் 100 சதவீதம் மருத்துவ குணங்கள் இருக்கின்றதாலே என்னமோ, இதை பெருமாளுக்கு ஒப்பிட்டு சொல்றாங்க. ஒரு பெரிய மருத்துவமனையில் எல்லா வியாதிகளுக்கும் மருத்துவம் பார்க்கின்றதும், ஒரு சின்ன துளசி செடி வளர்க்கின்றதும் ஒன்றுதான்.
ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதனின் அடிப்படை கோளாறு வாதம், பித்தம், கவம். வாதம் என்பது கை, கால், உடல் அசைவு சம்பந்தப்பட்டது. பித்தம் வயிறு சம்பந்தப்பட்டது. கவம் சளியால் வரும் நோய் சம்பந்தப்பட்டது.
மனிதனின் உடல் உஷ்ணம் கூடுவதாலும், குறைவதாலும் ஏற்படும் பிரச்சனை சுகர், பிரஷர், கொலஸ்டிரால் என்று எல்லாமே இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது. ஆனால், இதை எல்லாத்தையும் சரி செய்யும் மருத்துவக் குணம் துளசிகிட்ட இருக்கின்றது. எளிதாக கிடைக்கின்ற துளசியின் மகத்துவங்கள் ஏராளம்.
இந்த துளசி நம் உடலுக்கு சிறந்த கிருமி நாசினி. இதை நாம் மென்று சாப்பிடும்போது வாயில் உள்ள கிருமிகளை அழித்து விட்டுத்தான் உள்ளே. செல்கின்றது. பல்வலி, வாய்துர்நாற்றம், வயிறு சம்பந்தப்பட்ட சீரணக் கோளாறுக்களை போக்கி, வாழ்நாள் முழுவதும் புத்துணர்ச்சியை அளிக்க உதவுகின்றது இந்த துளசி.
துளசி இலையின் மணமும், சுவையும் மன இறுக்கத்தையும் போக்க செய்யும். இருமல், நரம்பு தளர்ச்சி, தொண்டை நோய்களுக்கு உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உள்ளது இந்த துளசி இலைக்கு.
இது குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொடுக்கலாம். இதை விட ஒரு இனிப்பான செய்தி என்னவென்றால், துளசி சக்கரை வியாதிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. இந்தியாவில் மொத்தம் 4 கோடி பேர்கள் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் கண், கிட்னி, இதயம், நரம்புகள், பாதம் என இந்த உறுப்புக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் துளசி இலையை சாப்பிடுவதன் மூலம், சக்கரை அளவு குறைவது மட்டுமல்லாமல், உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றது.
இதனால்தான் துளசியை கடவுளோடு ஒப்பிடுகின்றார்கள். துளசியை தினமும் உண்போம். துன்பமில்லா வாழ்வை பெறுவோம்.
ஒரு துளசி செடி பார்சல் | Wow thulasi benefits are amazing | Organic Living
https://youtu.be/ouvgPN1mOYU