“பசித்து புசி” என்று பெரியவர்கள் சொல்ல நாம் கேட்டிருப்போம். எப்போது நமக்கு பசி ஏற்படுகின்றதோ, அப்போதுதான் நம் உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது என்று அர்த்தம்.
அப்பொழுதான் நாம் உணவை உட்கொள்ள வேண்டும். இதை நம்மில் எத்தனை பேர் கடைபிடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இதை கடைபிடித்தால், நம் உடல் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும்.
ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் மணி எத்தனை என்று பார்த்துதான் உணவை உட்கொள்கின்றோம். சரியாக காலை 9 மணி, மத்தியானம்1 மணி, மற்றும் இரவு 7 மணி என்று உணவை உண்பதற்கு அட்டவணை போட்டுக் கொள்கின்றோம். இது முற்றிலும் தவறு.
ஆனால் என்ன செய்ய முடியும். ஆழ்மனதில் விதைத்ததை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்.
சரி உணவினை உட்கொள்ள முடிவு செய்தாயிற்று. எந்தெந்த உணவினை எந்தெந்த நேரங்களில் சாப்பிடலாம், எந்தெந்த நேரங்களில் சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம். ஆப்பிளை காலையில் சாப்பிட வேண்டும். பெக்டின் என்னும் கன்டன்ட், பிளட் சுகரை குறைக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். அதுவே இரவில் ஆப்பிளை சாப்பிட்டால் டையஸ்ட் ஆவது ரொம்ப கடினமாக இருக்கும். வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையும் அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கையும் காலையில்தான் சாப்பிட வேண்டும். இதுவும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும். தக்காளியை காலையில்தான் சாப்பிடவேண்டும். காலையில் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். அதுவே இரவில் சாப்பிட்டால் அசிட்டிட்டியை உருவாக்கும்
அதுமாதிரி டார்க் சாக்லெட்டை, ஸ்நாக்ஸ் மாதிடி அடிக்கடி சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும். அதுவே பிரேக்பாஸ்ட்டா எடுத்துக்கிட்டோம் என்று சொன்னால், அதில் இருக்கும் ஆன்ட்டியாக்ஸிடன்ட்ஸ், மாரடைப்பை குறைக்கும். வயசான தோற்றத்தையும் மாற்றும்.
உடம்பு குறைய வேண்டும் என்று சொன்னால், சீஸ காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். தவறாக இரவில் உண்டால் உடம்பு எடை கூடி விடும். அதுபோல, வாழப்பழத்தை அனைவரும் இரவில்தான் உண்பார்கள். அவ்வாறு டையஸ்ட் எளிமையாக இருக்கும் என்று எண்ணுவார்கள். அது முற்றிலும் தவறு. இரவில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் டையலிசன் ரொம்பவே சிரமமாகிவிடும். சளியை உருவாக்கும். அதுவே காலையில் எடுத்துக் கொண்டால் இன்யோர் சிஸ்டத்தை வலுப்படுத்தும். தோல் செல்களை அதிகப்படுத்தும்.
இந்த முந்திரி, திராட்சை போன்ற உணவுகளை மத்தியான உணவிற்கு எடுத்துக் கொண்டால் பி.பி. என்னும் ரிஸ்க்கை குறைக்கும். இரவில் எடுத்துக் கொண்டால் பருமனை அதிகரிக்கும்.
பாலை இரவில் குடித்தால் நன்கு தூக்கம் வரும். அதுவே பால் காலையில் டையலிசனுக்கு எதிரி. இதை சரியாக கடைபிடித்தாலே, நல்ல ஆரோக்கியம் நமக்கு சொந்தம் நண்பர்களே. எனவே இதை கடைபிடிக்கலாம் நம் அன்றாட வாழ்வில்……..!