ஐஸ் தண்ணியா ஐயையோ வேண்டாம் பா | Ice water is Very Harmful | organic Living





குளுகுளுன்னு இருக்கின்ற பனிக்காலம் போயே போச்சு. இனிமே வெயில் நம்மை சுட்டெரிக்கப்போகுதுன்னு நெனைச்சாலே பயமாத்தான் இருக்கு. .சிஃபேனுக்கு கீழே உட்கார்ந்து தவமே இருக்க ஆரம்பிச்சுடுவோம். ஜீஸ் குடிக்கின்றது. பழங்கள் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, பொன்ற பல நல்ல விஷயங்களை, நம்மை அறியாமலே நாம் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
        அப்படி செய்யும் போது தாகத்தையும், உடல் வெப்பத்தையும் மட்டும் குறைக்காமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றது. அதே நேரத்தில்தான், நாம் இன்னொரு மிகப் பெரிய தவறையும் செய்கின்றோம். அது, ஜஸ்வாட்டர் குடிப்பதுதான்.
        வெயிலில் அலைந்து திரிந்து, வீட்டிற்குள் நாம் வந்தவுடன் முதலில் நாம் செய்வது ப்ரிட்ஜை திறந்து, ஜஸ்வாட்டர் குடிப்பதுதான்.
        இது தற்காலிகமாக தாகத்தை போக்கினாலும், உடல் ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜஸ்வாட்டர் குடிப்பதால் உடலில் உள்ள திசுக்களும் இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டு பண்ணும். ஜஸ் வாட்டர் குடிக்கும் போது, சஞ்சரி என்னும் நரம்பு தூண்டப்படும். இந்த நரம்பானது மண்டையோட்டின் பத்தாவது நரம்பு.. இதுதான், உடம்பின் தன்னிச்சை நரம்பு மண்டலம். இந்த நரம்பானது தன்னிச்சையற்ற செயல்களை கட்டுப்படுத்துகின்றது. குளிர்ச்சியான நீரை நாம் குடிக்கும் போது, இந்த நரம்பு இந்த நரம்பு இதயத் துடிப்பை குறையச் செய்யும். நாம் குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, உடலில் உள்ள தட்பவெப்ப நிலை திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் மாறும் . இது அடிக்கடி நடந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
        அது மட்டுமல்லாமல், ஜஸ் வாட்டர் குடிப்பதால் நம்முடைய பற்கள் பலவீனமாகி விழுகின்ற அபாயம் இருக்கு.
        உடலுக்கு தீங்கு செய்கின்ற ஜஸ்வாட்டரை விட்டு விட்டு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் இளநீர், பதநீர் போன்ற, நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்

ஐஸ் தண்ணியா ஐயையோ வேண்டாம் பா | Ice water is Very Harmful | organic Living

https://youtu.be/-Wb1eS4tiHA