நாம் வாழும் இந்த உலக வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருக்கலாம். ஆனால், கொஞ்சம் கூட புரோட்டா இருக்கக் கூடாது. ஆமாங்க, இதை கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைய கெடுதல் இருக்கு. பொதுவா புரோட்டா மைதா மாவுலதான் செய்வார்கள். இது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். இது வெறும் மைதா மாவுதானே அதனால் தீமை எதுவும் இருக்காது என்று நாம் நினைப்போம்.
நாம் நினைப்பது போல் இது வெறும் மைதா மாவு இல்லை. இதில் என்னென்ன கலக்குகின்றார்கள் என்று இப்போது பார்ப்போம். பென்ஸ்சாய்க்பெரைக்சின், இது நைஸாய் அரைத்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் கோதுமை மாவில் கலப்பதால் வெள்ளை ஆகின்றது. அதாவது மைதா மாவாகின்றது.
மாவை வெள்ளையாக்கிட்டு நம் முடியை கருப்பாக்குகின்றது. ஆமாம், நாம் முடிக்கு பயன்படுத்துகின்ற டையில் கலக்கப்படும் ஒரு வகையான இரசாயணம்தான் இது. மேலும் நாட்டிபிசியக் கலர், மினரல் ஹாயில், டேஸ்ட்டு மேக்கர், சுகர், ஜாக்ரின், அஜினமுன்டோ, அலோக்சன் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றது.
இதனால் மைதா இன்னும் அபாயகரமாக ஆகின்றது. இதில் அலோக்சன் என்ற பொருள் சோதனைக்கூடங்களில் எலிகளுக்கு நீரழிவு நோய் வர வைப்பதற்கு பயன்படும். உடலுக்கு தேவையான சத்துக்கள் மைதாவில் சிறிதளவும் இல்லை. யு.கே,
சைனா போன்ற நாடுகளில் மைதா மாவு தடை செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் புரோட்டாவில் மட்டும் இல்லாமல், எந்த ஒரு உணவிலும் மைதா கலவாமல் உண்பது அதிக நன்மை கிடைக்கும். எனவே மைதாவை தவிர்ப்போம். மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
பரோட்டா நமக்கு வேட்டா | Harmful effects of Parrota | Organic Living https://youtu.be/GUkDzhvwQmQ