உங்கள் அனைவரையும் மங்களகரமாக வரவேற்கின்றேன் ஏனென்றால் நாம் இப்போது மங்களகரமாக இருக்கின்ற மஞ்சளைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றேன். வீட்டு மளிகை சாமான்கள் வாங்கினால், நாம் எழுதும் லிஸ்ட்டில் முதலில் எழுதுவது மஞ்சள்தான். மங்களகரமா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. எந்த சூழ்நிலையிலும் நாம் மஞ்சளை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மஞ்சள் ஒரு நல்ல கிருமி நாசினி என்பது நமக்கு தெரியும். ஆனால், அது ஒரு நல்ல வலி நிவாரணியும் கூட. கிருமிகளால் வரும் தொண்டை வலி, எரிச்சல், தலை பாரம் இதற்கு நல்ல நிவாரணி. சளியினால் வரும் இருமல், மூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு காரணமாக இருக்கின்ற கிருமிகளை அழித்து, நல்ல நிவாரணம் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், இதில் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் எதிர்பொருட்களான நார்ச்சத்துக்கள், நியாஸினி, நிப்போபிளவின், சோளை உள்ளிட்ட பல முக்கிய வேதிப் பொருட்கள் மஞ்சளில் இருக்கின்றது. அதனால்தான் தினமும் சமைக்கும் உணவில் மஞ்சளை சேர்க்கின்றோம்.. மஞ்சளில் கர்புமின் என்னும் பொருள் இருக்கின்றது. இதுதான் , மஞ்சள் நிறத்தைக் கொடுக்கின்றது.
இது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. பொதுவாக மஞ்சளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உடலுக்காக, மற்றொன்று உணவுக்காக. கஸ்தூரி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என்று இரண்டு வகை இருக்கின்றது. இதை பெண்கள் பூசி குளிப்பார்கள். ஆனால், இன்று எத்தனை பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கின்றார்கள் என்று கேட்டால், வெறும் கேள்விக்குறி மட்டும்தான் மிஞ்சும். அதிலும், இளம் பெண்களில் பல பேர்கள், மஞ்சள் என்றால் வயதானவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும், என்று முடிவு பண்ணிவிட்டு மஞ்சளை ஒதுக்கி வைத்து விடுகின்றார்கள். ஆனால், இளம்பெண்கள் பயன்படுத்தும் எத்தனையோ க்ரீம் வகைகளை விட, இந்த மஞ்சள் பல நன்மைகள் தரும். அப்படிப்பட்ட இந்த மஞ்சளை இளம் பெண்கள் பயன்படுத்தினால் மட்டுமே, மஞ்சளின் நன்மைகள் புரியும்.
அழகு, நறுமணம், சரும பளபளப்பு இப்படி பெண்களை, பெண்களாய் காட்டும் மஞ்சளுக்கு, உடலில் உஷ்ணத்தால் வரக் கூடிய வெடிப்பு, கொப்பளம், கட்டிகளைக் கூட இந்த மஞ்சள் போக்கி விடும்.
இப்படி அற்புத நன்மைகள் தரும் மஞ்சளை, நம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்துவோம். நன்மைகள் பல பெறுவோம்.
பெண்னை பெண்னாக காட்டும் மஞ்சள் | Beauty
and Health Benefits of Turmeric | Organic Living
and Health Benefits of Turmeric | Organic Living